தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துணைமின் நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை, மே 26, 2026 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், புதிய பேருந்து நிலையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, மாதாகோட்டை, வஸ்தாசாவடி, ரெட்டிபாளையம் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். பொதுமக்கள் கூடுதல் விபரங்களுக்கு 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என உதவி செயற்பொறியாளர் கே. அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.