மத்திய பிரதேச மாநிலத்தின் தார் நகரிலுள்ள கமால் மௌலா மசூதியை சரஸ்வதி கோயில் என அறிவித்த அம்மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் சங்பரிவார அமைப்புகளைக் கண்டித்தும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சனிக்கிழமை மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் ஹெச். அப்துல் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலப் பொதுச்செயலாளர் பி. செந்தில்குமார் கலந்துகொண்டு, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்று சிறப்புரையாற்றினார்.