தஞ்சாவூர்: டவுன் பஸ்களை பழைய பஸ்ஸ்டாண்ட் வழி இயக்க கோரிக்கை

0பார்த்தது
தஞ்சாவூர்: டவுன் பஸ்களை பழைய பஸ்ஸ்டாண்ட் வழி இயக்க கோரிக்கை
தஞ்சாவூர் கொடிமரத்து மூலையில் சாலைப்பணிகள் நடைபெறுவதால், கும்பகோணம் மற்றும் திருவையாறு மார்க்கமாக வரும் புறநகர் பேருந்துகள் ராஜராஜ சோழன் சிலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகின்றன. இதனால் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய பயணிகள் சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இது முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தப் பேருந்துகளை பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி