தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியில் 2024-ல் 24 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதல் குற்றவாளியான கவி (எ) கவிதாசன், பிப்ரவரி 18 அன்று நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த அவரை ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.