தஞ்சை தமிழ் பல்கலையில் B, Ed, M. Ed மாணவர் சேர்க்கை

3பார்த்தது
தஞ்சை தமிழ் பல்கலையில் B, Ed, M. Ed மாணவர் சேர்க்கை
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை ஜூன் 1 அன்று துணைவேந்தர் குழு உறுப்பினர் பெ. பாரதஜோதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் மாணவியாக து. ர. வர்ஷினி சேர்க்கை பெற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் கூறுகையில், பருவத் தேர்வுகள் மற்றும் முடிவுகள் விரைவாக வெளியிடப்படுவதால் மாணவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்றார். தகுதியுள்ள மாணவர்கள் உடனடியாகச் சேர்க்கை பெறலாம்.

தொடர்புடைய செய்தி