தஞ்சாவூர் வட்டார
போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான தோட்டப் பராமரிப்பு இயந்திரங்களின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன. கல்லூரியின் பின்புறம் உள்ள ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த 11 கியர் பாக்ஸ்கள், ஒரு சீரமைப்பு இயந்திரம் உள்ளிட்ட பாகங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கல்லூரி மேலாளர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், தமிழ்ப்பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.