தஞ்சை திட்டை குரு பெயர்ச்சி விழா

382பார்த்தது
தஞ்சை திட்டை குரு பெயர்ச்சி விழா
தஞ்சை அருகே உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் செவ்வாய்க்கிழமை காலை குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த குரு பகவானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். இவ்விழாவை முன்னிட்டு, ஜூன் 3-ல் லட்சார்ச்சனையும், ஜூன் 5 முதல் 7 வரை பரிகார ஹோமங்களும் நடைபெறவுள்ளன. நேரில் வர முடியாத பக்தர்கள் ஜூன் 6-ஆம் தேதிக்குள் தங்களின் விவரங்களை கட்டணத்துடன் மணியார்டர் அல்லது டி. டி. மூலம் கோவில் முகவரிக்கு அனுப்பி பரிகாரம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி