தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளை நாளை (மார்ச் 4) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான இடத்தில் சந்திக்கவுள்ளார். இக்கூட்டத்தில் சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.