தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின்போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு அரங்கிற்குள் நுழைய முயன்றனர். அப்போது, அங்கிருந்த ஒரு பெண் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.