தஞ்சை: மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

827பார்த்தது
தஞ்சை: மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
தஞ்சாவூரில், சேலை வியாபாரி போல் நடித்து, ஒரு பெண்ணின் 7 பவுன் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டிபாளையம் ஆனந்தம் நகரைச் சேர்ந்த ரஞ்சிதம் (50) என்பவர், ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே கடை வைத்துள்ளார். சமீபத்தில் பழக்கமான சேலை வியாபாரி ஒருவர், ரஞ்சிதத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று, மயக்க ஸ்ப்ரே அடித்து கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் நகைகளை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி