தஞ்சாவூர்: வாலிபர், மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

577பார்த்தது
தஞ்சாவூர்: வாலிபர், மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் இடதுசாரி மாணவர் மற்றும் வாலிபர் அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் க. அருளரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி