தஞ்சாவூர் மாவட்டம் கூனம்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விழினா பெர்கென் ஆகியோரின் திருமணம் நேற்று தஞ்சாவூரில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இருவரும் ஜெர்மனியில் ஐ.டி. நிறுவனத்தில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களது நட்பு காதலாக மலர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.