தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 22. 5. 2026 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை உள்ள தகுதியான நபர்களை 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். விருப்பமுள்ள தஞ்சை மாவட்ட இளைஞர்கள் www. tnprivatejobs. tn. gov. in இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், அடையாள அட்டை நகல்களுடன் பங்கேற்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.