மாற்றுத்திறனாளிகள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்

3பார்த்தது
தஞ்சாவூரில், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து, அரசாணை எண் 20-ஐ அமல்படுத்த வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் இன்று கருப்பு தினமாக அனுசரித்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கருப்பு பட்டை அணிந்து, கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில், சிறப்பு ஆள்சேர்ப்பு நடத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடையாள அட்டைகளைத் திரும்ப ஒப்படைத்து தொடர்ந்து போராடுவோம் என எச்சரித்தனர்.