தங்கும் விடுதியில் ஓட்டுநர் மர்மச் சாவு

61பார்த்தது
தங்கும் விடுதியில் ஓட்டுநர் மர்மச் சாவு
தஞ்சாவூரிலுள்ள தங்கும் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை காவல் துறையினர் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் கீழவாசல் பாலோபநந்தவனம் பகுதியைச் சேர்ந்தவர் குறளரசன் (32). வாகன ஓட்டுநர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது இரு நண்பர்களுடன் கீழ் பாலம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு அறை எடுத்து தங்கினார்.
இவர்களில் குறளரசனும், ஒரு நண்பரும் மட்டும் ஒரு வாரமாக தங்கியிருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்தது. தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினர் அறையைத் திறந்து பார்த்தபோது குறளரசன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து, குறளரசனின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குறளரசனின் உயிரிழப்புக்கு காரணம் குறித்து, அவருடன் தங்கியிருந்த நண்பரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி