தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் நேற்று அதிகாலை சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அந்தப் பணத்தைச் சுருட்டிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சிதறிக் கிடந்தது தேர்தல் பணமா அல்லது தவறி விழுந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.