09.01.2026 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை குறித்த தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்யும் டிவிஷன் பெஞ்சின் சமீபத்திய தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும், இது ஹிந்து மக்களின் பழக்கவழக்கங்களுக்கும், பெரும்பான்மை மக்களின் எண்ணங்களுக்கும் எதிராகவும், சங்க பரிவார சக்திகளுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.