திருவையாறு: பம்ப் செட்களில் மின்கம்பிகள் தொடர்ந்து திருட்டு

2பார்த்தது
திருவையாறு: பம்ப் செட்களில் மின்கம்பிகள் தொடர்ந்து திருட்டு
திருவையாறு அருகே பெரமூர் ஊராட்சி எட்டரை வேலி கிராமத்தில், விளைநிலங்களிலுள்ள விவசாய பம்ப்செட்களிலிருந்து விலை உயர்ந்த மின் கம்பிகள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றன. கடந்த மே 24-ம் தேதி இரவு ஒரே நாளில் 9 விவசாயிகளுக்குச் சொந்தமான 11 பம்ப்செட்களின் மின் கம்பிகள் திருட்டு போயுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இத்திருட்டுச் சம்பவங்கள் குறித்து ஏற்கனவே ஒருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தும் திருட்டு ஓயவில்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி