தஞ்சாவூர் மாவட்டம் அண்டக்குடி பகுதியைச் சேர்ந்த சித்ரா (49), அவரது மகன் தமிழ்செல்வன் (25) மற்றும் மகள் ரித்திகா (20) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வலங்கைமான் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, புறவழிச்சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து அவர்கள் சென்ற பைக் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.