திருவையாறில் தியாகபிரம்ம மஹோஸ்தவ சபா பொதுக்குழு கூட்டம் சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. 2024-2025 நிதிநிலை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2026 ஜனவரி 7-ம் தேதி நடைபெறவுள்ள தியாகராஜரின் 179-வது ஆராதனை விழாவை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இதற்கான பந்தகால் நடும் முகூர்த்தம் நவம்பர் 30-ம் தேதி காலை 8.30 முதல் 10 மணிக்குள் நடைபெறும்.