டிராக்டர் மோதி கூலித் தொழிலாளி பலி தஞ்சை அருகே சோகம்

7பார்த்தது
டிராக்டர் மோதி கூலித் தொழிலாளி பலி தஞ்சை அருகே சோகம்
செங்கிப்பட்டி அருகே பாலையப்பட்டியைச் சேர்ந்த அருள்ராஜ் (55), அவரது மகன் டேவிட் ராஜ் (33) மற்றும் ராஜ்கண்ணன் (32) ஆகியோர் நேற்று காலை கூலி வேலைக்காக கிள்ளுக்கோட்டைக்கு பைக்கில் சென்றனர். வேலை முடிந்து இரவு 10 மணியளவில் பாலையப்பட்டிக்கு திரும்பும்போது, உசிலம்பட்டி கிராமம் அருகே எதிரே வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அருள்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி