தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டையைச் சேர்ந்த
தளபதி என்பவரது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, இன்று (மே 16) அதிகாலை 6 பேர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கண்டியூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதிய விபத்தில்,
தளபதி மற்றும் தமிழரசன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற 4 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவையாறு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.