தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத உடல்கள் நல்லடக்கம்

0பார்த்தது
தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத உடல்கள் நல்லடக்கம்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருந்த 18 பேரின் உடல்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர். தஞ்சாவூர் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்குகள் தொடர்பான இந்த உடல்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில் காவல் ஆய்வாளர் வி. சந்திரா உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி