தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பெண்களுக்காக தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ந்து வரும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளதாகக் கூறினார். ஒன்றிய பாஜக பாசிச அரசு தமிழ்நாட்டுக்கு நிதி உரிமை, மொழி உரிமை பறிப்பதாகவும், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒன்றிய பாஜகவின் முரட்டு அடிமையாக செயல்படுவதாகவும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று தலைவர் மீண்டும் முதல்வராவார் என்றும் அவர் தெரிவித்தார்.