தஞ்சாவூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

517பார்த்தது
தஞ்சாவூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் - ஆலக்குடி முக்கியச் சாலையில் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட பெரிய உடைப்பால் தினசரி பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. கடுமையான கோடைக் காலத்தில் தண்ணீர் வீணாவதோடு, வெளியேறும் நீரால் சாலையில் பெரிய பள்ளம் உருவாகி இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விபத்துகளைத் தவிர்க்கவும், தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் இந்த உடைப்பைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி