தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன
ர். இங்குள்ள மக்கள் முறையான மருத்துவ சிகிச்சை பெற சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கே செல்ல வேண்டியுள்ளது. நேரடி பேருந்து வசதி இல்லாததால் பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து மருத்துவமனை செல்வதற்குள் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. இது பள்ளி மாணவர்களையும், முதியவர்களையும் பெரிதும் பாதிக்கிறது. எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாஞ்சிக்கோட்டை பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.