தஞ்சையில் உள்ள சிவகங்கை பூங்காவில், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இங்குள்ள பழமையான மரம் பட்டுப்போய், காய்ந்த நிலையில் உள்ளது. இந்த மரம் இனி பிழைக்க வாய்ப்பில்லை என்பதால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக இதை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.