தஞ்சாவூர்: பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு

59பார்த்தது
தஞ்சாவூர்: பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு
தஞ்சாவூர், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை (நிப்டெம்) நிறுவனக் கூட்டரங்கில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அபெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தொழில் 5.0 என்ற தலைப்பில் பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் கலந்துகொண்டு பயிற்சி முகாமினை துவக்கி வைத்து பேசியதாவது: பெண்கள் தொழில் முனைவோராக உருவாகிட தகுந்த அனுபவங்களை வெற்றியாளர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் தொழில் மற்றும் உற்பத்தியிலும் விற்பனை செய்வதற்கான உத்திகளை பயிற்சியின் மூலமாக பெற்று சிறந்த தொழில் முனைவோராக உயர வேண்டும். 

சிறிய முதலீடாக இருந்தாலும், கடின உழைப்பின் மூலமாகவும், தரமான பொருளை விற்பனை செய்வதன் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமுடையவர்களாக விளங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. அதுபோல் இப்பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்துள்ள நீங்கள் அனைவரும் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன் என்றார். பின்னர் நிப்டெம் நிறுவனத்தின் கருவிகள், உணவு உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இந்நிகழ்வில், நிப்டெம் நிறுவன இயக்குநர் வி. பழனிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you