தஞ்சை மாவட்டத்தில் வளர்க்கப்படும் அனைத்து கால்நடைகளுக்கும் பாரத் பசுதன் தளத்தில் தனித்துவமான 12 இலக்க அடையாள எண் (காதுவில்லை) வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கால்நடைகளின் சிகிச்சை, தடுப்பூசி விவரங்களுடன், உரிமையாளர்களின் காப்பீடு மற்றும் இதர விவரங்களும் தேசிய மின்னணு கால்நடை இயக்கத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகள் எளிதாகச் சென்றடைய வழிவகை செய்யும் இப்பணிக்கு, கிராம மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் முழு ஒத்துழைப்பு அளித்து உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.