தஞ்சை: போக்சோவில் வாலிபர் கைது

69பார்த்தது
தஞ்சை: போக்சோவில் வாலிபர் கைது
தஞ்சை அருகே கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த 24 வயது இளைஞர் பிரதீப் கண்ணன், அதே பகுதியில் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து, உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரதீப் கண்ணன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி