தஞ்சாவூர் அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே மருங்குளத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் கண்ணன் (30). இவர், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை மார்ச் 11-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் அச்சிறுமியைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கண்ணனை புதன்கிழமை கைது செய்தனர்