தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூர், வடுகன்குத்தகை என்ற முகவரியில் வசிக்கும் கோவிந்தராசு என்பவரின் மகன் சுரேஷ் (வயது 39) என்ற பாலியல் குற்றவாளியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரிலும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையிலும், திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைத்திட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நடுவர் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து சுரேஷை காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.