
தஞ்சையிலிருந்து நாமக்கல்லுக்கு அரிசி ரயிலில் அனுப்பிவைப்பு
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் கொள்முதல் செய்யப்பட்டு, அரவை செய்யப்பட்ட1, 250 டன் புழுங்கல் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து லாரிகள் மூலம் அரிசி மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயிலில் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பப்பட்டது.


























