தஞ்சை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி 35 பேர் காயம்

0பார்த்தது
தஞ்சை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி 35 பேர் காயம்
தஞ்சாவூா் மாதாகோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த ஏறத்தாழ 700 காளைகளைப் பிடிக்க 400 வீரா்கள் களமிறக்கப்பட்டனா். இப்போட்டியில் மாடுபிடி வீரா்கள், மாட்டின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 35 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 17 போ் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். மற்றவா்கள் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.