மரத்தில் ஏறிய இளநீர் வியாபாரி மின்சாரம் பாய்ந்து பலி

52பார்த்தது
மரத்தில் ஏறிய இளநீர் வியாபாரி மின்சாரம் பாய்ந்து பலி
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே கோவிந்தநாட்டு சேரி ஊராட்சி, புத்தூர் கிராமம் மேல தெருவில் வசித்து வருபவர் மதியழகன் (வயது 50). இளநீர் வியாபாரி. இவரது மனைவி லதா (வயது 40), மகன்கள் நாகராஜன் வயது13, கேசவன் வயது12, உள்ளனர். இளநீர் வியாபாரியான மதியழகன் தினம் தோறும், தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று(செப்.29) காலை கபிஸ்தலம் அருகே அமைந்துள்ள மேட்டுத்தெரு கிராமத்தில் கொங்கன் வாய்க்கால் அருகில் அமைந்துள்ள தென்னை மரத்தில். இளநீர் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறி உள்ளார்.

அப்போது தென்னமரத்தில் உள்ள காய்ந்த மட்டை மின்சாரக் கம்பியின் மீது விழுந்தது. இதனால் இளநீர் பறித்து கொண்டிருந்த மதியழகன் தென்னை மரத்தின் மேலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 30-அடி உயரத்தில் ஏணி மரத்தை வைத்து, தென்னை மரத்தின் மீது ஏறி, உயிரிழந்த மதியழகனை கயிற்றைக் கட்டி பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து இறந்த மதியழகனின் உடலைக் கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளநீர் வியாபாரி மதியழகன் இறந்த சம்பவம் புத்தூர் கிராமத்தை சோகத்தில் மூழ்கடித்தது.
Job Suitcase

Jobs near you