அம்மாபேட்டை: விதிமுறைகள் மீறி மருந்து விற்பதாக புகார்

1பார்த்தது
அம்மாபேட்டை: விதிமுறைகள் மீறி மருந்து விற்பதாக புகார்
அம்மாபேட்டையில் உள்ள பிரதமர் ஜன் ஔஷதி கேந்திரத்தில், விதிமுறைகளை மீறி உள்ளூர் சந்தை மருந்துகள் விற்கப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. BPPI மூலம் மட்டுமே மருந்துகளைப் பெற்று விற்க வேண்டும் என்ற விதியை மீறி, தனியார் மருந்துகளை தள்ளுபடி விலையில் விற்று மக்களை ஏமாற்றுவதாகவும், இதனால் தரமற்ற மருந்துகள் புழங்க வாய்ப்புள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட மருந்தகத்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஜன் ஔஷதி மையங்களிலும் ஆய்வு நடத்த கோரியும் மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறையினருக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி