பூதலூர் அருகே குளத்தில் மிதந்த சிசு சடலம் மீட்பு

67பார்த்தது
பூதலூர் அருகே குளத்தில் மிதந்த சிசு சடலம் மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வெண்டையம்பட்டி ஊராட்சி வேலுப்பட்டி கிராமத்தில் குளத்தில் மிதந்த சிசுவை போலீசார் மீட்டனர். வேலுப்பட்டி கிராமம் காமாட்சி குளத்தில் பிறந்து சில நாட்களே ஆன சிசு ஒன்று மிதப்பதாக வெண்டையம்பட்டி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் (பொ) ஜாம்ஜான் ராஜா பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து காவல் சார்பு ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் நிகழ்விடம் சென்று சிசுவை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த சிசு ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை என்று போலீசார் கூறினர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி