பைக்கில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம்

1பார்த்தது
பைக்கில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம்
திருக்காட்டுப்பள்ளி அருகே கூடல்நாணல் பகுதியில் சாலைப் பணிக்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லி மற்றும் மணலில் மோதி பைக் விபத்துக்குள்ளானதில், ரவிச்சந்திரன் (48) என்பவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.