பூதலூர்: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

630பார்த்தது
பூதலூர்: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் விவசாய உரங்கள் விலை உயர்வை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சாணூரப்பட்டி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி