செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் பணிக்கு, MBBS முடித்து 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் அல்லது ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். காசநோய் சிறப்புப் படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதத் தொகுப்பூதியம் ₹40,000. தகுதியுள்ளவர்கள் வரும் 20.06.2026-க்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகக் குழுத்தலைவர், மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை, செங்கிப்பட்டி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. ரேவதி தெரிவித்துள்ளார்.