பூதலூர்-தூர்வாரியதாக முறைகேடு CPM ஆர்ப்பாட்டத்தில் தீர்வு

3பார்த்தது
பூதலூர்-தூர்வாரியதாக முறைகேடு CPM ஆர்ப்பாட்டத்தில் தீர்வு
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியத்தில், கண்டமங்கலம் கிளை வாய்க்காலை தூர்வாராமல் மோசடி செய்ததாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மைக்கேல்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3,300 மீட்டர் தூர்வாரியதாக 2,362 மனித நாட்களுக்கு ரூ. 8 லட்சத்து 54 ஆயிரத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முறைகேடு செய்துள்ளதாகவும், இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மார்ச் 2026 வரை பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி