ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் மாதாந்திர சிறப்பு கூட்டம் பேரூராட்சி பெருந்தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பேரூராட்சி துணை பெருந்தலைவர் கமலா சேகர், செயல் அலுவலர் சி. ராமபிரசாத் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் மாலதி சிவக்கொழுந்து வரவேற்றார். இக்கூட்டத்தில் சுவாமி விவேகானந்தர் அவர்கள் கும்பகோணம் பகுதிக்கு இரு முறை விஜயம் செய்துள்ளார் என்றும், அதனால், கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளில் சுவாமிஜியின் செல்வாக்கு, அதிகமாக உள்ளது. எனவே, 2023-2024-ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய புதியதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகம் பெறும்வண்ணம் சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு தனித்துவமான பீடத்துடன் திருவுருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்