கனமழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம்.. விவசாயிகள் கோரிக்கை

81பார்த்தது
கனமழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம்.. விவசாயிகள் கோரிக்கை
திருவையாறு பகுதியில் பெய்த கனமழையால் மழையால் நீரில் மூழ்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவையாறு அடுத்து ஐம்பத்தி மேல் நகரம் மற்றும் வரகூர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையின் காரணமாக கடந்த வாரங்களில் கோனக்கருங்கால் ஆறு கரை உடைப்பின் காரணமாக மழைநீரால் சூழப்பட்டு 10 நாள், 20 நாள், 30 நாள் கொண்ட நெற்பயிர்கள் மூழ்கின. நான்கு நாட்களுக்குப் பிறகு மழைநீர் வடிந்தது. 

பயிர்கள் அழுகி சேதமடைந்தன. இதையடுத்து, ஏராளமான பணம் செலவழித்து நெற்பயிரை காப்பாற்றியுள்ளோம். மேலும், செலவு செய்ய பணம் இல்லாததால் தமிழக அரசு நிவாரணத்தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. அரசு அலுவலர்கள் தூரத்தில் சாலையில் நின்று பார்த்துவிட்டு நெற்பயிர்கள் நன்றாக இருக்கிறது எனக்கூறுகின்றனர். 

தண்ணீர் வடிந்த பிறகு கூடுதலாக செலவு செய்து பயிரை காப்பாற்றி வைத்துள்ளோம். அவற்றை பார்த்துவிட்டு பயிர் நன்றாக இருக்கிறது நிவாரணம் தேவையில்லை என சொல்லி சில வேளாண் அலுவலர்கள் செல்வது வருத்தமாக உள்ளது. பயிரை அருகில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி