தஞ்சாவூர்: காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்; விவசாயிகள் வேதனை

55பார்த்தது
தஞ்சாவூர்: காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்; விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிர்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. 

மாவட்டத்தில் சில ஆண்டுகளாக குறுவை, சம்பா பருவங்கள் மட்டுமல்லாமல் கோடையிலும் பருவம் தவறிப் பெய்யும் மழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கும் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்து வரும் நிலையில், சில ஆண்டுகளாக பூதலூர், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட வட்டாரங்களிலுள்ள காவிரி, வெள்ளாறு, குடமுருட்டி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைகின்றன. 

நெற்பயிர்கள் மட்டுமல்லாமல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி உள்ளிட்ட பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர். இரவு நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயல்களில் படுத்து உருண்டு விளையாடுவதால், பயிர்கள் சேதமடைகின்றன.

தொடர்புடைய செய்தி