தஞ்சை மாவட்டம் பாபநாசம் சரகத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், யூரியா உரத் தட்டுப்பாடு விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பு குறைவாக இருப்பதால், தனியார் கடைகளை நாடும் விவசாயிகள், யூரியாவுடன் தேவையற்ற பிற பொருட்களையும் வாங்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் கூடுதல் செலவினங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தனியார் உரக்கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.