திருக்காட்டுப்பள்ளியில் புற்றுநோய், கண் பரிசோதனை இலவச முகாம்

54பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் புற்றுநோய், கண் பரிசோதனை இலவச முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் எக்ஸெல் ஹெல்த் கேர் மற்றும் சுகவாழ்வு ஹெல்த் கேர் இணைந்து நடத்திய மார்பகப் புற்றுநோய் மற்றும் கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை பூண்டி மாதா பேராலய அதிபர் பி. ஜே. சாம்சன் தொடக்கி வைத்தார். திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். பாஜக மாநில விவசாய பிரிவு செயலர் பூண்டி எஸ். வெங்கடேசன் வரவேற்றார். மருத்துவ குழுவினர் வேன் ஆய்வகத்துடன் வந்து பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். தேவையானவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி