தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டையில் கூலித்தொழிலாளி ஐயப்பன் (31) தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் அவரது மகன் தமிழ்ச்செல்வன் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த ஐயப்பன், மதுபோதைக்கு அடிமையாகி, நேற்று முன்தினம் செங்கல் காளவாய் அருகே உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கமலாதேவி அளித்த புகாரின் பேரில், திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.