திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பாலதண்டாயுதத்தை, மைக்கேல்பட்டி பகுதியில் பணியின்போது தடுத்த சதீஷ்குமார் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீஸார் சதீஷ்குமாரை கைது செய்து, திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.