மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு: தஞ்சை விவசாயிகள் கவலை

451பார்த்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு: தஞ்சை விவசாயிகள் கவலை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.93 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் 1,254 கன அடி தண்ணீர் டெல்டா விவசாயிகளின் சாகுபடித் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. குடிநீருக்காக 1,000 கன அடி நீர் திறக்கப்படுவதால், கல்லணையிலிருந்தும் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கான நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே இந்த ஆண்டு விவசாயம் தடையின்றி நடைபெறும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி