திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி சாலையில் உள்ள விண்ணமங்கலம் கிராமத்தில், வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை உரிமையாளர்கள் முறையாகப் பராமரிக்காமல் இரவில் அவிழ்த்து விடுவதால் அவை சாலையில் சுற்றித் திரிந்து விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகின்றன. இதனால், சாலையில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.